விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சின்னதம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. இதற்கு முன்பாக வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த பவானி ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்தார்.

பிரதீப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இயற்கை எய்தினார். திருமண வாழ்க்கை இப்படையானதால் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார். மேலும், பல்வேறு பிரச்சனைகள் இவருடைய வாழ்க்கையில் நடந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த பவானி ரெட்டி சமூக வலைத்தள பக்கத்தில் எட்டி பார்த்து வந்தவர் தற்போது ரசிகர்களை ஆட்டிப் படைத்து வருகிறார். இந்த ஊரடங்கால், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து பிரபலங்களும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில் நடிகைகள் தனது புகைப்படங்களை பதிவிட்டு தங்களுக்கான வாய்ப்புகளை தேடிக்கொள்ள சமூக வலைதளபக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பவானி ரெட்டியின் சில கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், உங்க மேல மரியாதை இருக்கு.. இப்படிலாம் ட்ரெஸ் போடாதிங்க என்று விசும்பி வருகிறார்கள்.இன்னொரு பக்கம், அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வரும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

error: Content is protected !!