சாலையோரம் காய்கறிகள் விற்கும் பெண் ஒருவர், பசியால் தவித்த மயிலுக்கு தனது கையால் உணவு அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

வறுமை வாட்டியபோதும், மயிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்யும் பெண்ணை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

காய்கறி விற்கும் பெண்ணை தனது உள்ளத்தால் உயர்ந்த பெண்மணி என பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ- ட்வீட்களை பெற்று வைரலாகி வரும் இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.