இன்று பலரும் தூக்கமின்மையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், பதட்டம், வேலை பளு, ஸ்மார்ட் போன் மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல காரணங்கள் உள்ளன.
இதனை குறைக்க பலர் இரவில் தூக்க மருந்துகளை அன்றாடம் எடுத்து வருகின்றனர். இருப்பினும் இது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
சில உணவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் கூட இந்த தூக்கமின்மையை சரி செய்ய உதவும். இதில் வாழைப்பழம் முக்கிய இடம் பெறுகின்றது.
வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைய இருக்கின்றன.
அதிலும் மெக்னீசியம் உறக்கம் சார்ந்த தொல்லைகளை சீராக்க பெருமளவு உதவுகிறது.
அந்தவகையில் தற்போது தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட வாழைப்பழத்தினை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம் ஒன்று
- ஒரு கிளாஸ் நீர்
- இலவங்கப் பட்டை சிறிதளவு (தேவை என்றால்)
தயாரிக்கும் முறை
வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டிவிடுங்கள். பிறகு வாழைப்பழத்தை நீரில் வேக வைய்யுங்கள்.
குறைந்தது 10 நிமிடங்களாவது வாழைப்பழம் நீரில் வேக வேண்டும். பிறகு தேவை என்றால் பொடித்த இலவங்கப் பட்டையை தூவவும்.
இதனை தினமும் இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த வாழைப்பழம் வேக வைத்த நீரை குடித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவாக வெளிவரலாம்.