நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். நடிகர் மாதவன் உடன் இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.

அப்படத்தில் பாக்ஸராக நடித்தது மட்டுமின்றி நிச்ச வாழ்க்கையிலும் பாக்ஸராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அருண் விஜய்யின் பாக்ஸர், அரவிந்த் சுவாமியின் வணங்காமுடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் மற்ற நட்சத்திரங்கள் போலவே இவரும் இந்த லாக்டவுனில் உடற்பயிற்சியில் முழுமையாக இறங்கியுள்ளார்.

ஆம் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த ஒரு பதிவு ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளதால் செம ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில், மீண்டும் அது போல ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் ரித்திகா.

இதனை பார்த்த ரசிகர்கள், பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என கருத்து தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,