பருக்கள், தழும்புகள் மறைய இதை மூன்று முறை போட்டாலே போதும்...! இனி உங்கள் முகத்தில் தழும்புகளே இருக்காது..!!

மாசு மருக்கள் எல்லாம் இல்லாமல் புதிதாக பூத்த ரோஜாவை போல இருந்த முகம் தற்போது எல்லாம் மாசு, மருக்கள் நிறைந்த தழும்புகள் உள்ள சருமமாக மாறிவிட்டதா? தழும்புகள் பல வகைப்படும். ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன.

இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும்.

பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும். மேலும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சரி, இதற்கு என்ன தான் செய்வது என கேட்டால், இயற்கையிலேயே பல நல்ல தீர்வுகள் இருக்கின்றன. இது நவீன மருத்துவ அளவிற்கு வேகமானதாக இல்லை என்றாலும், தழும்புகளை போக்க கூடியது. மேலும் பக்க விளைவுகள் அற்றதாகும்.

தழும்புக்கான காரணம்

 

அம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் பரு உண்டாகும் என்பது பரவலான கருத்து. அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு.

அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம்.

பருக்கள் தழும்புகள் நீங்க கீழே வீடியோவில் போடப்பட்டுள்ளதை போல செய்து பாருங்கள் தீர்வு நிச்சயம்