தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் த்ரோபேக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களுடைய த்ரோபேக் புகைப்ப்டங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்ற போது அங்கு பிகினி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் இவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!