பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு ஃபேமசான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4. இந் நிகழ்ச்சியை மட்டும் விஜய் டிவி எப்பொழுதும் சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஏதாவது புது ட்ராக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற பிக்பாஸ் எண்ணத்தை , பார்ட்டிசன்கள் தாங்களவே மோதல்களை உருவாக்கி அந்த வேலையை சுலபமாக்கி விட்டனர். எனவேதான் காதல் ட்ராக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் பிக்பாஸ் கைவிடவே ஆரம்பிச்சுட்டாரு. ஏனென்றால் மோதல்கள் மூலமாகவே இந்த பிக்பாஸ் சீசன் மக்களிடையே பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறது..
ஆனாலும் காதல் ட்ராக் ஒன்று உருவாகாமல் இல்லை. தங்களுக்குள் காதல் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கும் பாலா ஷிவானிக்கு இடையே உரசல் மட்டும் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது என்ன வகையான உரசல் என்று வெளிப்படையாக இன்னும் தெரியவில்லை.
அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் நேற்று பாலாஜி வந்து ஷிவானியின் காதில் தோடு மாட்டிவிட்டது நாலு மணி போஸ்ட் ரசிகர்களை எரிச்சலைடயச் செய்துள்ளது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களிலேயே பாலாஜியும் ஷிவானியும் மிக மிக நெருக்கமாகிவிட்டனர் . மேலும் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒன்றாகவே நெருக்கமாக சுற்றித் திரிகின்றனர்.
இதைப்பற்றி இருவரிடமும் பிக்பாஸ் கேட்டாலும் ‘காதலிக்கவில்லை, நாங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் தான்’ என்று ஒரே மாதிரியான பதில்களையே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் சந்தேகத்தை வலுத்துள்ளது.
இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளியே உள்ள பிக் பாஸ் ரசிகர்களும் செம காண்டில் இருக்கிறார்களாம்.
எனவே, ஷிவானி பாலாஜி ஆகியோரின் நடவடிக்கைகளை பார்த்த நாலு மணி போஸ்ட் ரசிகர்கள் பலர், ‘முதல்ல செல்லத்தை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே தூக்கணும் டா’ என்று ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு இருக்கின்றனராம். இது எப்படி இருக்கு?