பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கொரோனாவால் தள்ளிப்போனது. இதனால், இம்முறை பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சியை தொடங்க தயாரிப்புக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த மூன்று சீசன்களில் இருந்த இரண்டு பேர் உறங்கும் படுக்கைகளை மாற்றி, போட்டியாளர்களுக்கு தனித்தனி படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு போட்டியாளர்கள் 14 நாட்கள் முன்கூட்டியே தனிமை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்தவகையில் இம்முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் என உறுதியாகக் கூறப்படும், போட்டியாளர்களின் கொ ரோனா தனிமைப்படுத்துதல் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அதில், குக் வித் கோமாளி நடிகையான ரம்யா பாண்டியன், நடிகை கேப்ரில்லா. ஷிவானி நாரயணன், ஜித்தன் ரமேஷ், நடிகர் அனுமோகன், தொகுப்பாளர் ரியோ, சூப்பர் சிங்கர் வேல்முருகன், விஜே அர்ச்சனா.

சூப்பர் சிங்கர் அஜித், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, பிகில் நடிகை அமிர்த ஐயர். என இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!