பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். ரூ.100 க்கு மேல் யார் வேண்டுமானாலும் நிதி தரலாம் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதையடுத்து, திரையுலகினர் அ தி ர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தனக்கு சில அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொ ற்று உறுதியாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இணையத்தில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருதாக தகவல் வருகின்றன.அதனை நம்பவேண்டாம் என் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளது.