தமிழ் சினிமாவில் தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதனை தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி,விஷால், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் தற்போது தமிழில் அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் மஹா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு நேற்று மஹா படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

அதுமட்டுமின்றி நாசா, நட்சத்திரம் ஒன்றிற்கு நடிகை ஹன்சிகாவின் பெயரை சூட்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மிகவும் உற்சாகத்துடன் நடிகை ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில், நட்சத்திரங்கள் மீது நான் எவ்வளவு ஆர்வமாக இருப்பேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நான் நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். எனது பெயரை ஒரு நட்சத்திரத்திற்கு பதிவு செய்ததை விட வேறு சிறந்த பிறந்தநாள் பரிசை நான் எதிர்பார்க்க முடியாது. இதனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. புதிய நட்சத்திரம் பிறந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.