பெண் ஒருவர் தன்னுடைய கணவனுக்கு கொடுத்த பிறந்த நாள் சர்பிரைஸ் வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், கணவனின் கண்களை மூடி ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கிறார். கதவைத் திறந்ததுமே ஐ லவ் யூ என்றும் அதன் கீழ் இதயத்தின் வடிவமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அறை முழுக்க விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்து. இதைப் பார்த்த கணவன் வாயெல்லாம் பல்லாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

அதைத் தொடர்ந்து அறையில் ஆங்காங்கே உள்ள பரிசுகளைப் பற்றி மனைவி கூற, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியில் மனைவியை கட்டிப்படித்து அன்பை வெளிப்படுத்துகிறார்.

இந்த வீடியோவை 75 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். “எப்போதும் இப்படி ஒன்றாக இருங்கள்” என்று பலரும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

error: Content is protected !!