நாடோடிகள் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா. அவரை தான் மைனா படத்தில் நடிக்க கேட்டார்களாம். டேட்ஸ் இல்லாததால் நடிக்க முடியாது என்று அவர் கூறிவிட்டார்.அனன்யா பிசியாக இருந்ததால் அமலா பாலை கேட்க அவர் மைனா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அந்த ஒரு படத்தால் கோலிவுட்டில் ஏகப் பிரபலம் ஆனார்.அமலா பால் கோலிவுட்டின் முன்னணி நடிகையானார். நல்லா நடிக்குது பொண்ணு என்று பெயர் எடுத்தாலும் அனன்யாவால் பெரிய இடத்திற்கு வர முடியாமல் போனது.

ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை மணந்தார். திருமணத்திற்கு பிறகும் அனன்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தன் மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் மலையாளத்திலும் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு வருகிறார். அந்தவகையில் இதுவரை மலையாளத்தில் மட்டுமே 23 படங்களில் நடித்து விட்டாராம் அனன்யா.

ஆனபோதும்,. இன்னும் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை.திருமணத்திற்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ள அம்மணி, தமிழைப்பொறுத்தவரை ஹீரோயினியாக மட்டும்தான் நடிப்பேன் என்கிற கொள்கையையும் தற்போது விலக்கிக் கொண்டுள்ளாராம்.

மாறாக, தனது திறமைக்கு சவால் விடக்கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறிவருகிறார். இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமியுள்ளார் அம்மணி.