பெண்களே வாரம் மூன்று நாட்கள் உளுந்தங்கஞ்சியை இப்படி காய்ச்சி குடிச்சி பாருங்க! எந்த பிரச்சனை எல்லாம் நீங்க பெருசா நெனச்சீங்களோ அதெல்லாம் ஈசியா சரியாகி விடும்

இன்றைய காலக்கட்டத்தில், கொஞ்சம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறது. காரணம், நாம் சாப்பிடும் உணவு தான். சத்தில்லாத உணவுகளால், வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து முழுதாகக் கிடைப்பது கிடையாது.

எனவேல் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்தங்கஞ்சி குடிப்பது மிகவும் சிறந்தது. இந்த உளுந்தங்கஞ்சியை, விரைவாக சுவையாக, ஆரோக்கியமாக எப்படி காய்ச்சுவது என்பதைப் பற்றி பார்ப்போம்

இதற்கு 1/4 கப் அளவு வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து ஆக இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உளுந்தை தண்ணீர் ஊற்றி மூன்று முறை கழுவி கொண்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த தண்ணீரை, கீழே ஊற்றி விடக் கூடாது.

ஒரு மணி நேரம் ஊறிய உளுந்தை, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு, அரைக்கும் போது ஊற வைத்த, சத்துமிக்க அந்த தண்ணீரை ஊற்றி தான் அரைக்கவேண்டும்.மிகவும் கெட்டியாக அரைக்கக் கூடாது. தண்ணீர் பதத்தில் உளுந்தை, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு, அந்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி, மிதமான தீயில் அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் வரை கைவிடாமல் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், கஞ்சி உருண்டை பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கைவிடாமல் கலக்கி விடும் பட்சத்தில், நீர்ம நிலையில் இருக்கும் உளுந்த மாவு, கஞ்சி பதத்திற்கு வந்துவிடும்.

1/4 கப் உளுந்துக்கு, 1/2 கப் அளவு வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். 1/2 கப் அளவு வெல்லத்திற்கு, 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடங்கள், அடுப்பில் வைத்து நன்றாக கரைத்து, வடிகட்டி, உளுந்தம் கஞ்சியில் சேர்த்து விடுங்கள். வெல்லத்தின் பச்சை வாசனை போகும் வரை, மீண்டும் 5 நிமிடங்கள் கஞ்சியை, வெல்லத்தோடு சேர்த்து கொதிக்க வைத்தாலே போதும்.

வெல்லத்தை சேர்த்த பின்பும் கைவிடாமல் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஏலக்காய் பொடி தூவி விடுங்கள். இறுதியாக நெய்யில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை இவைகளை வறுத்து சேர்த்தால் சுவையான ஆரோக்கியமான உளுந்தங் கஞ்சி ரெடியாகிவிடும்.

இது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆண்களும் குடிப்பதில் தவறில்லை. இருப்பினும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்சனைகள், போன்ற ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தருகிறது.

வாரத்திற்கு மூன்று நாள் குடித்தால் கூட போதும். ஒரே மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் நல்ல வித்தியாசத்தை பெண்கள் உணர முடியும்.