பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்னைகளில் பொடுகு தொல்லை பெரிய பிரச்சனையாக உள்ளது. தலையில் பொடுகு நிறைய இருப்பதால் முடி கொட்டி விடும். பொடுகு தொல்லையை சரிசெய்ய பலவகையான வழிகள் இருந்தாலும் இஞ்சியை கொண்டு பொடுகை எப்படி போக்குவது அதை பற்றி பார்க்கலாம்.

மேலும் இஞ்சியின் ஆற்றல் பொடுகை முற்றிலும் போக்க கூடியவை. முடி உதிர்வை தடுக்க இஞ்சி பயணப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

சக்தி வாய்ந்த இஞ்சி:

இஞ்சி பல வகையான நோய்களை குணப்படுத்தும் திறன் இஞ்சிக்கு உண்டு. மேலும் இஞ்சியில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இஞ்சி ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஒரு அற்புத மருந்து இஞ்சி ஆகும். இதை நாம் பல வகையான மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் பல நோய்களை குணப்படுத்தலாம்.

பயன்கள்:

இஞ்சியை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் எந்த அளவிற்கு நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறதோ அதே அளவிற்கு தலை முடியின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இவை தலையில் உருவாகும் பொடுகை இவை முற்றிலும் குறைத்து விடுகிறது.

எளிய வழி:

பொடுகை போக்குவதற்கு இஞ்சி வைத்தியம் ஒன்றே போதும். இஞ்சியை வைத்து தலையில் உண்டாகும் போடுகை போக்கலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடியில் இருக்கும் பொடுகை விரைவில் போக்கிடலாம்.

தேவையானவை:

இதற்கு தேவையான பொருட்கள்

* இஞ்சி சாறு 2 ஸ்பூன்

*நெல்லி சாறு அல்லது நெல்லி எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு நெல்லிக்காய் சாற்றையும் தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவை இரண்டையும் நன்கு கலந்து தலைக்கு தேய்த்து பிறகு 20 நிமிடம் கழித்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறைசெய்து வந்தால் பொடுகு தொல்லை முற்றிலும் போய் விடும்.