தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் இரண்டு நடிகைகள் என்றால் அது த்ரிஷாவும், நயன்தாராவும் மட்டும் தான்.பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். நடிகை நயன்தாரா சில பல காதல் சர்ச்சைகளில் சிக்கி இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார்.

சமீப நாட்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து ராங்கி, பரமபதம் விளையாட்டு போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் வேலைகள் கொரோனா ஊரடங்கினாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்க்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வந்த த்ரிஷா அதிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதள கைப்பிடிகள் எதுவும் இல்லை.

இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன. இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.