போலிஸ்க்கு கிடைத்த ரகசிய தகவல்: சென்னையில் பிரபல நடிகர் ஷாம் கைது... என்ன காரணம் தெரியுமா...?

லேசா லேசா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படத்தில் நடித்த நடிகர் ஷாம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடபட்டுள்ளார்.

இந்த தகவல் காவல்துறையினருக்கு ரகசியமாக கிடைத்ததால், நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டதையறிந்த பொலிசார் உடனடியாக ஷாம் உட்பட அனைவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பின்பு ஜாமீனில் விடுவிக்கபபட்டுள்ளனர்.

பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு பணத்தினை வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டு பொலிசார் கைது செய்தது கோலிவுட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியதோடு, ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.