நடித்த முதல் படத்திலேயே பல விருதுகளை வென்று ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷான். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக வந்த கௌரி தற்போது மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் கௌரி தற்போது வெளியிட்டுள்ள பாவாடை சட்டையுடன் ஹை ஹீல்ஸ் புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ஒரு சில திரைப்படங்களில் என்னதான் ஹீரோவும் ஹீரோயினும் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும் அந்தப் படத்தில் நடித்த ஒரு சில கதாபாத்திரங்களின் இயல்பு நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

அவ்வாறு தமிழ் சினிமாவிற்கு 96 படத்தின் மூலம் அறிமுகமான கௌரி ஜி கிஷான் வரும் காட்சியில் எல்லாம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து பாராட்டுகளை வாங்கியுள்ளார்.

தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல மொழி ரசிகர்களையும் ரசிக்க வைத்த 96 திரைப்படத்தில் திரிஷாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் குட்டி ஜானுவாக மிக தத்ரூபமாக நடித்திருந்த கௌரி தற்பொழுது விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் படிப்படியாக நடித்து வரும் கௌரி பரியேறும் பெருமாள் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் கௌரி தற்பொழுது பாவாடை சட்டையில் பாவ்லாவாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அதில் மேல்சட்டையை மேலே இறுக்கி கட்டியவாறு ஹை ஹீல்ஸ் அணிந்து சுதந்திர பறவை போல மகிழ்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த மொட்டை மாடி போட்டோஷூட் தற்பொழுது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.