பிரபல நடிகர் மிலிந்த் சோமன் தன்னை விட அதிக வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்து வந்த விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை எதிர்கொண்டது எப்படி என நடிகரின் மனைவி முதல்முறையாக பேசியுள்ளார்.
தமிழில் பையா, அலெக்ஸ்பாண்டியன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மிலிந்த் சோமன் (54). இவர் கடந்த 2006-ல் பிரான்ஞ் நடிகை மைலின் ஜம்பானோய் என்பவரை திருமணம் செய்த நிலையில் 2009-ல் விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில் விமான பணிப்பெண்ணான அன்கிதா கொன்வாரை மிலிந்த் இரவு விடுதியில் சந்தித்த நிலையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிராவின் அலிபவுக் நகரில் காதலர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அன்கிதாவுக்கு 28 வயதே ஆகும் நிலையில் தம்பதிக்குள் உள்ள 26 வயது இடைவெளி விமர்சனத்துக்குள்ளானது. இந்த விமர்சங்கள் மற்றும் கிண்டல்களை எப்படி எதிர்கொண்டேன் என்பது குறித்து அன்கிதா மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், எங்களை பற்றி ஓன்லைனில் தவறாக பேசியவர்களுக்கு தைரியமும், சுயமரியாதையும் இல்லை என்றே சொல்வேன்.
உண்மையான அன்பு இன்னும் இருக்கிறது என்பதை அவர்கள் நம்புவதற்கு சாத்தியமே இல்லை.
அந்த சமயத்தில் எங்களை பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை பார்த்து நானும் என் கணவரும் சேர்ந்து சிரிப்போம். இப்படி தான் அதை எதிர்கொண்டோம்.
எங்களை பற்றி தவறாக பேசியவர்களுக்கு நல்ல குணநலன்களை அவர்களின் பெற்றோர்கள் சொல்லி தராமல் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.