தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் மற்றும் இயக்குனருமான விளங்கியவர் மணிவண்ணன்.தனது வித்தியாசமான இயக்கத்தாலும் தனது குணச்சித்திர நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருந்தார்.
கோபுரங்கள் சாய்வதில்லை இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, 24 மணி நேரம், ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். 400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.
கடைசியாக மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அ மை திப்படை-2 ம் பாகமான ‘நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ’ என்ற படம் வெளியாகி இருந்தது.
பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.
மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.மிகவும் உடல் நலம் பா தி க்கப்பட்டிருந்த மணிவண்ணன், அ று வை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே ம ர ண மடைந்தார்.
நடிகர் மணிவண்ணனின் மனைவி செங்கமலத்தால் அவருடைய கணவர் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அதோடு செங்கமலம் மணிவண்ணனுக்கு தாரமாக மட்டுமில்லாமல் தாயாகவும் இருந்தவர். மேலும், இவர் தன்னுடைய கணவனின் இறப்பினை குறித்து ஒவ்வொரு நாளும் அழுது அழுது புலம்பி இருந்துள்ளார்.
செங்கமலம் மணிவண்ணனை நினைத்து நினைத்து சரியாக சாப்பிடுவதும் இல்லை, தூங்குவதும் இல்லை புலம்பிக்கொண்டே இருப்பார். மேலும், மணிவண்ணன் இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கூட இருந்திருக்காது மணிவண்ணன் மனைவி செங்கமலம் தன்னுடைய உயிரிழந்தார்.