சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம். சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.

உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

வேக வைக்காத அல்லது சமைக்காத பச்சை உணவுகள் உடலில் சேதம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆயுர்வேத முறையில் வேக வைக்காத உணவு, செரிமானம், உடல் வெப்ப நிலை , முடி உதிர்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏன் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்?
  • ஆயுர்வேத முறையில், காய்கறிகள் இயற்கையாகவே இனிப்பு, வறட்சி மற்றும் கடினமாக இருக்க கூடும்.
  • இது சிலரது உடலில் செரித்து விடும், சிலரது உடலில் செரிமான பிரச்சனையை உண்டாக்குமாம்.
  • எனவே, இதை தவிர்த்து நன்கு செரிமானம் ஆகவும், ஊட்டச்சத்து உடலில் தங்கவும் காய்கறிகளை வேகவைத்து தான் உண்ண வேண்டும் என கூறப்படும்.

 

  • ஊட்டச்சத்துக்களை அப்படியே தங்க வைக்க, குறைவான சூட்டில் வேக வைப்பது தான் சிறந்த முறையாகுமாம்.
  • இவ்வாறு சமைப்பதால் உணவில் ஊட்டச்சத்து தங்குவது மட்டுமின்றி, செரிமானமும் சீரிய முறையில் இயங்க வழிவகுக்குமாம்.
மைக்ரோவ் வேண்டாம்
  • மைக்ரோவேவில் மீண்டும் சூடு செய்வதால், அதிலிருந்து வெளிப்படும் சூடு, உணவில் இருக்கும் மூலக்கூறுகளை சிதைத்துவிடும்..

  • சில நச்சு தண்மையான உணவுகள் உயிரை கூட பறிக்குமாம்.
  • இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்பதால் மைக்ரோவேவ் ஓவனை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படும்.
முக்கிய குறிப்பு
  • ஃப்ர்ட்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
  • இன்று சமைத்த உணவை இன்றே உண்டு கழிப்பது தான் சிறந்த முறையாகும்.
  • எனவே, ஃப்ரிட்ஜில் வைத்து நாட்கள் கடத்தி உணவை உண்ணும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
  • இது செரிமான பிரச்சினைகள் உண்டாக முக்கிய காரணமாக இருக்கின்றது.

 

error: Content is protected !!