இயற்கையின் பேரழகையும், அதிசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான ஆச்சரியங்கள் காலப்போக்கில் வைரலாகி வருவது வழக்கம் தான்

அவற்றில் ஒன்றாக மனித முகச்சாயலில் இருக்கும் ‘Triggerfish’ மீன் ஒன்றின் புகைப்படம் சமூகவலைதங்ககளில் அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது. இந்த மீன்கள் பாலிஸ்டிடே குடும்பத்தின் பெரும்பாலும் பிரகாசமான வண்ண மீன்களில் சுமார் 40 இனங்கள். பெரும்பாலும் கோடுகள் மற்றும் புள்ளிகளால் குறிக்கப்பட்ட அவை உலகெங்கிலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வாழ்கின்றன.

மனித முகச்சாயலில் இருக்கும் இந்த மீன் வடிவமைப்பு மனிதர்களை போன்று உதடுகள் பெற்றுள்ளது. ஆனால் இணையத்தில் தீயாய் பரவும் குறித்த Triggerfish புகைப்படத்தை பார்க்கும் போது மேப்பிங் செய்தது போன்று தோன்றுகிறது.