ஜெயலலிதாவுக்கு சொந்தமான அவர் வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி இருந்ததாக அந்த வீட்டை அரசுடைமை ஆக்கியது தொடர்பான ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 22ஆம் திகதி இதுதொடர்பாக ஆளுநரால் வெளியிடப்பட்ட அவசர சட்டம் குறித்த அரசாணை விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படுவதாகவும், அதன் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் போயஸ்கார்டன் இல்லத்தில் 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட தங்கத்திலான 14 பொருட்களும், 601 கிலோ மற்றும் 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளி பொருட்களும், ஜெயலலிதா வாங்கிய 394 விருதுகளும், 11 தொலைகாட்சி பெட்டிகள், 38 ஏசி.க்கள், 29 செல்போன் மற்றும் தொலைபேசிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 721 பொருள்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பொருட்களின் விபரம் கீழே,