சமீபத்தில் மறைந்த மருத்துவரும், பிரபல நடிகருமான சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகர் சேதுராமன்.

மறைந்த நடிகரே மறுபிறவி எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் சென்னையில் பிரபல மருத்துவராகவும் திகழ்ந்த சேதுராமன் கடந்த மார்ச் மாதம் கார் டியாக் அரெஸ்டால் கா லமா னார்.

இந்த நிலையில் சேது மர ண மடைந்தபோது அவரது மனைவி உமையாள் கர்ப்பமாக இருந்தார். இதனை அடுத்து அவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதும் ’குட்டிசேது’ பிறந்துவிட்டதாகவும், சேதுவே மறுபிறவி எடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்

error: Content is protected !!