மாஸ்க் அணியும் போது உங்கள் வாய் துர்நாற்றம் அடிக்கின்றதா..? அதனை போக்க இதோ சில எளிய வழிகள்...!!

இன்று கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக அனைவரும் மாஸ்க் அணியவேண்டி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இருப்பினும் மாஸ்க் அணிவதனால் பலர் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக அவரவர் வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதால், இத்தனை நாட்களாக வாய் துர்நாற்றம் வீசுவதைத் தெரியாமல் இருந்தவர்களும் தற்போது தெரிந்திருப்பார்கள்.

இதனை தடுக்க என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  • ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்லுவதன் மூலும், வாய் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, வாயில் எச்சில் உற்பத்தியும் தூண்டிவிடப்படும்.

  • ஒரு டீஸ்பூன் பட்டை பொடியை நீரில் போட்டு, அத்துடன் ஒரு பிரியாணி இலை மற்றும் 1-2 ஏலக்காயைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரை வடிகட்டி, குளிர்ந்த பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • எலுமிச்சை துண்டை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது எலுமிச்சை தோல் கூட வாயை புத்துணர்ச்சி அடையச் செய்யும். அதற்கு தினமும் ஒரு கப் நீரில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.
  • பார்ஸ்லி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால், பார்ஸ்லி தண்டுகளை சிறிது வினிகரில் முழுமையாக நனைத்து வாயில் போட்டு மெல்லுங்கள்.

  • ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் கிராம்பு பொடி சேர்த்து, மிதமான தீயில் 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். பின் அதைக் கொண்டு தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அந்த பானத்தை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, வாய் துர்நாற்றமும் சரிசெய்யப்படும். வேண்டுமானால், சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.
  • ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நிறைந்த புதினா எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின் இந்த கலவையால் வாயைக் கொப்பளிக்கவும். இதனால் வாயில் உள்ள அமில அளவுகள் சீராக இருப்பதுடன், வாய் துர்நாற்றமும் நீங்கும்.

  • பொதுவாக தினமும் அதிகளவு நீரைக் குடித்தாலே வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதோடு அடிக்கடி குளிர்ந்த நீரால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.