நடிகை காயத்ரி ஜெயராமன் தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது 36 வயதாகும் இவர் மும்பையை சேர்ந்தவர். முதலில் மாடலிங் செய்து வந்தார் பின் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் அமைந்தது.

 

பின்னர் இவர் “ஏப்ரல் மாதத்தில்”, “வசீகரா”, “ஸ்ரீ ” போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றினார். இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற ஏராளமான மொழி படங்களில் நடித்துள்ளார்.

 

பொதுவாக சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே ஹீரோயினாக நடிக்க முடியும் அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காது. பின்னர் துணை கதாபாத்திரம் மற்றும் சீரியலில் நடிக்க ஆரம்பிப்பார்கள். அதே போல காயத்ரி ஜெயராமனுக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நீச்சல் கற்று தரும் பயிற்சியாளராக பணியாற்றினார்.

 

பின்னர் இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “அழகு” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி, பைரவி சீரியலில் நடித்தார்.

இந்நிலையில் இவருக்கு மாடலிங் மீது உள்ள ஆர்வத்தால் அவ்வப்போது போட்டோ ஷுட் களை நடத்தி அதன் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார். சமீபத்தில் கூட தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு ஹாட்டான போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் “ம ஞ்சக்காட்டு மைனாவா இது சும்மா ம ப்பேத்துதே” என வர்ணித்து வருகிறார்கள்.