இந்தியாவின் ஒடிசாவில் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு Ghol மீன் எனப்படும் அரிய மீன்கள் கிடைத்த நிலையில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். நாராயணா ஜெனா என்ற மீனவர் வழக்கம் போல நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். தினமும் போல நூற்றுக்கணக்கில் அல்லது சில ஆயிரத்தில் பணம் கிடைக்கும் அளவில் தனக்கு மீன் கிடைக்கும் என்று நினைத்தே கடலுக்குள் ஜெனா சென்றார்.  ஆனால் அவருக்கு நேற்று பெரும் அதிர்ஷ்டமான நேரம் போலும்.

அதாவது Ghol மீன் எனப்படும் அரியவகை மீன்கள் ஜெனாவின் வலைக்குள் சிக்கியது. இந்த மீன் ஒவ்வொன்றின் எடை 30 கிலோ இருக்கும். இந்த மீன்கள் ஒரு கிலோ கிராம் ரூ 6000-க்கு விலை போனது. நேற்று மட்டும் அவருக்கு ஒரு லட்சத்துக்கு 80 ஆயிரம் பணம் மீன் விற்றதன் மூலம் கிடைத்தது.

சரி, அப்படி என்ன சிறப்பு Ghol மீன்களிடம் உள்ளது என கேட்கிறீர்களா? இவ்வகை மீன்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் தோல்கள் அழகு சாதன பொருட்களை

செய்ய பயன்படுத்தப்படுகிறது. Ghol மீனின் துடுப்புகள் மது சுத்திகரிப்புக்கும் உதவுகிறது. இதோடு இதன் சுவாசப்பை ஒன்றின் விலை ரூ 1 லட்சத்துக்கு கூட விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.