பிரபல மாடல் அழகியான மீரா மிதுன் சமீப நாட்களாக விஜய், சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தகையில் தற்போது மீரா மிதுனின் எக்ஸ் மேனஜரான வெங்கட், மீரா மிதுன் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஷால் தன்னை திருமணம் செய்துகொள்ள 2, 3 வருடங்களாக கேட்டு வந்ததாகவும், தனது அம்மாவுக்கு விஷாலை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு பெரிய பணக்கார பையன் எல்லாம் வேண்டாம் என்று விஷாலை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக ஓவராக விளம்பரம் காட்டி பேசும் இந்த ஆடியோ சமூகலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, சமீபத்தில் கூட நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் கூட வெளியாகி இருந்தது. மேலும், சிம்பு தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டதாகவும் மீராமிதுன் கூறி இருந்தார்.

error: Content is protected !!