கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் லட்சுமி மேனன்.இந்த படத்திலேயே பலரது மனதில் இடம்பிடித்து விட்டார்.தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகி தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வெகு விரைவில் அவதரித்தார்.

தொடர்ந்து இவர் நடித்த குட்டிபுலி,பாண்டியநாடு,நான் சிகப்பு மனிதன்,மஞ்சப்பை படங்கள் சூப்பர்ஹிட் அடிக்க,தமிழ் சினிமாவின் ராசியான நடிகையாக மாறினார் லட்சுமி மேனன்.இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா படத்திலும் இவர் நடித்திருந்தார்.இந்த படமும் பெரிய வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து கார்த்தியின் கொம்பன்,தல அஜித்துடன் வேதாளம் படத்தில் முக்கிய வேடம்,ஜெயம் ரவியின் மிருதன் என்று டாப் ஹீரோக்களின் படங்களிலும் அசத்த தொடங்கினார்.இந்த படங்களும் நல்ல வெற்றியை பெற்று தந்தன.இதற்கடுத்து விஜய்சேதுபதியுடன் இவர் றெக்க படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் லட்சுமி மேனன்.பிரபுதேவாவின் யுங் மங் சங் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தவிர வேறு படங்களில் கடந்த சில வருடங்களில் கமிட் ஆகாமல் இருந்த லட்சுமி மேனன் தற்போது ஒரு சில படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை பகிர்ந்து வந்தார் லட்சுமி மேனன்தற்போது நீச்சல்குளத்தில் இருப்பது போல ஒரு வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் லட்சுமி மேனன்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.