செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ப்ரியா பவானி ஷங்கர் சீரியலில் நடிகையாகி பெரும்பான்மையான ரசிகர் வட்டத்தை பெற்றார்.
அதனை தொடர்ந்து, சினிமாவில் காலடி எடுத்த வைத்த அவர் “மேயாத மான்” என்ற படத்தில் நடித்தார். நடிகர் விஜய்யின் மெர்சல் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய போதும் இந்த படத்தின் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை சொட்ட சொட்ட சுவைத்தார் ப்ரியா பவானி ஷங்கர்.
இதனை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வந்தன.பின்பு கார்த்திக்கின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்தார், இவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது.
மேலும் இவர் தற்போது கிளாமர் கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். கடந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் என்னும் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என வதந்திகள் வெளியாகின.
இந்த செய்திகள் எல்லாம் பொய் என்று நிரூபிப்பதற்காக தனது காதல் கணவன் ராஜன் பிறந்தநாளுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்தார்.
இவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது காதலன் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து இருக்கிறார்கள்.
தற்போது குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் கசடதபர, பொம்மை, இந்தியன்2 போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா நடிகைகள் பலரும் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ப்ரியாபவானி ஷங்கரும் வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்சார் இல்லை என்பதா வெப் சீரிஸ்களில் நடிகைகள் வரம்பு மீறிய கவர்ச்சி காட்சிகளில் நடிக்கின்றனர். சமீபத்தில், நடிகை நித்யா மேனன் “Breath 2” என்ற வெப் சீரிஸில் மோசமான காட்சிகளில் நடித்து அதிர வைத்தார்.
ப்ரியா பவானி ஷங்கரும் தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால், இதுவரை இது குறித்த எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனினும், நீச்சல் உடையில் ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.