தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் லட்சுமி மேனன்.கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் அறிமுகமானது மலையாள படங்களில் தான்.சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர் பிறகு தனது தேர்ந்த நடிப்பினால் தமிழ் சினிமாவில் நல்ல முன்னணி நடிகையாக வலம்வந்தார்.பாவாடை
பாவாடை தாவணி என கிராமத்து பெண்ணாக அடக்கஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் பெரிதும் ரசிக்கப்பட்டார்.பின்னர் ஒரு சில படங்களில் சிறிது மாடர்னாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சிறிய வயதிலேயே முதிர்ச்சியான தோற்றம் இருப்பதாக கூறி படவாய்ப்புகள் இவர்க்கு வருவது குறைந்தவண்ணம் ஆனது.சிறிது நாட்களுக்கு பிறகு ஆளே காணாமல் போனார்.படிப்பு விஷயத்தில் பிசியாக இருப்பதாக கூறப்பட்டாலும் படவாய்ப்புகள் இல்லாமல் போனதே காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லக்ஷ்மி மேனன் “கிளாமராக நடிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பிகினி உடையிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன்.
நான் நீச்சல் கற்றுக்கொண்ட போது ஸ்விம்சூட் அணிந்து தான் நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்படியிருக்கும் போது பிகினி உடையில் வலம் வர எனக்கும் ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று கூறியுள்ளார். இதனால், விரைவில் அம்மணியை பிகினியில் பார்க்கலாம் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.