புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவநேசன். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் துணைமேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தனது உறவினர்களுக்கு தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்து கடந்த 7 வருடங்களாக குடும்பம் நடத்திவந்துள்ளார்.மேலும் இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய சிவநேசன் அங்கு, பெற்றோர்களிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிருந்தாதேவி என்ற பெண்ணை சிவநேசனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணமான ஒரு வாரத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சிவநேசன் சென்றுள்ளார். அதன்பின்னர் பல மாதங்கள் கடந்தும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனிடையே மனைவி சிவநேசனுக்கு போன் செய்து தன்னை எப்போது அழைத்துசெல்வீர்கள் என கேட்டதற்கும் சரியான பதில் கூறமால இருந்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த பிருந்தாதேவி சிவநேசன் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவருக்கு தங்கமணி என்ற மனைவியும், 5 வயதில் குழந்தை இருப்பதையும் கேள்விப்பட்டு அ தி ர் ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து, பிருந்தாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிவநேசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ப ர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.