முன்பெல்லாம் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் இல்லாத கஷ்டத்தை அனைத்தையும் அனுபவித்து தான் நுழையவேண்டும் ஆனால் தற்போதெல்லாம் டிக் டாக், பேஸ்புக் யூடியூப் இன்ஸ்டாகிராம் பல்வேறு செயல்களை பயன்படுத்தி தன்னை தானே பிரபலப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலம் ஆகி விடுகிறார்கள்.
இதன் மூலமாக அவர்கள் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இயக்குனர்களின் பார்வையில் படவே அவர்கள் எளிதில் சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள். இவ்வாறு மறைந்து இருந்த பல நடிகர் நடிகைகளை வெளிக்காட்டிய காட்டிய செயலி தான் டிக் டாக். ஆனால் இந்த டிக் டாக் செயலியானது தற்போது செயலிழந்து கிடக்கிறது.
இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் இன்ஸ்டாகிராம் பக்கம் படை எடுத்து வருகிறார்கள் இதனால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கமே கவர்ச்சி கடலாக மாறிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்பு வெள்ளி திரையில் மவுசு குறைந்த நடிகைதான் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் தற்போதெல்லாம் சின்னத்திரையில் புது புது கதாநாயகியை களம் இறக்கி கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக ரசிகர்களும் சின்னத்திரை பக்கம் சாய்ந்து விட்டார்கள். ஏனெனில் தற்போது சின்னத்திரை டைட்டில்கள் அனைத்தும் சினிமா பட டைட்டில்களை போலவே வைத்துள்ளார்கள்.
அது மட்டுமில்லாமல் காதல், சண்டை காட்சி, ரொமான்ஸ் அனைத்து காட்சிகளுமே சின்ன திரையில் இடம்பெற்றிருக்கிறது. அப்படி செந்தூரப்பூவே முள்ளும் மலரும் போன்ற சீரியலின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.
இவருடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் அழகாகவும் கிளாமராகவும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இவை அனைத்தையும் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது என்றால் இவரும் வெள்ளித்திரைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
இந்நிலையில் தற்போது தல அஜித்தின் மெகாஹிட் பாடலுக்கு நடனம் ஆடி மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.