மீசைய முறுக்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஆத்மிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

ஆத்மிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். நரகாசூரன் படம் நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் உள்ளது.

வைபவ், வரலட்சுமியுடன் ‘காட்டேரி’, உதயநிதியுடன் ‘கண்ணை நம்பாதே’, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ‘ராஞ்சனா’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது.

ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை.இது தொடர்பாக ஆத்மிகா, “அந்தத் தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன்.

நான் பாலிவுட் படங்களின் ரசிகை. ஆனால் அந்த மொழியைக் கற்க முடியவில்லை. அதனால் இப்போது ஊரடங்கில் இந்தி கற்று வருகிறேன். ‘ஏக் காவ் மே ரகு தாதா’ என்கிற அளவுக்கு என் மொழி அறிவு இப்போது மோசமாக இல்லை. என்னால் புரிந்து பதிலளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “நல்ல வாய்ப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக 4 தோல்விப் படங்களைத் தருவது மோசமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இந்தத் துறையில் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறேன்” என்று ஆத்மிகா கூறினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன வெஸ்டர்ன் டாய்லெட்ல கக்கூஸ் போற மாதிரி போஸ் கொடுத்திருக்கீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.