சமீபகாலமாக வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டி கொண்டிருக்கிறார் மீரா மிதுன். யாரென்றே தெரியாமல் இருந்த இவரை விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. அன்று முதல் இன்று வரை தான் ஒரு செலிபிரிட்டி என்பதை தனக்குத்தானே கூறிக் கொண்டு பிரபலப்படுத்தி வருகிறார். இந்நிலையில் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் த்ரிஷாவை சமீபத்தில் வம்புக்கு இழுத்த மீரா மிதுன் மோடியையும் விட்டு வைக்கவில்லை.

அதனை தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகள் பலரையும் வம்புக்கு இழுக்கும் வகையில் சர்ச்சை கருத்துக்களைப் பேசி வைத்துள்ளார். எல்லாத்துக்கும் உச்சகட்டமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரையும் அவர்களது சொந்த ஊர் மற்றும் ஜாதியை பற்றி குறிப்பிட்டு ட்விட்டரில் சமீபத்தில் ஒரு கருத்து வெளியிட்டார். இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டே இருந்த ரசிகர்கள் இந்த பதிவுக்கு பிறகு மீரா மிதுனை கண்டபடி பேசி விட்டார்கள்.

இவ்வளவு நாள் உள்ளுக்குள் இருந்த ஆத்திரத்தையும் மொத்தமாக கொட்டித் தீர்த்து வருகின்றனர். புல்லட் பைக்கில் தொப்பையை பிதுக்கிக்கொண்டு நமிதா போல் குண்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கி கட்டி வருகிறார் மீரா மிதுன். இந்த புகைப்படம் வெறித்தனமாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!