சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,இந்தி என நிறைய மொழிகளில் நடித்துள்ளார்.
நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார்.
அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது 38 வயதாகிறது.மாளவிகா நடிப்பதை நிறுத்தி முழுக்க முழுக்க குடும்பத்தலைவி ஆகி விட்டார்.
கல்யாணம் ஆன பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா உலகத்தையே விட்டு விலகிய நடிகை மாளவிகா விற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது அவர் தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.மேலும் மறுபடியும் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகை மாளவிகா தற்போது இரண்டு கதைகளை கேட்டுள்ளாராம்.
மேலும் அந்த திரைப்படங்களில் நடிக்கவும் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாளவிகா ட்ரையல் ரூமில் தொடை தெரியும் படி குட்டியான உடையில் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.