தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த “காதல் கண் கட்டுதே” என்ற குறும்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை “அதுல்யா ரவி. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

அதுமட்டுமல்லாமல் தனது தொழில்நுட்ப படிப்பை சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.இவருக்கு முதல் திரைப்படம் என்றால் அது “நாகேஷ் திரையரங்கம்” தான் சில பல காரணங்களால் இந்த திரைப்படம் வெளியிடுவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது.

அதனால் “காதல் கண் கட்டுதே” என்ற குறும்படம் முதலில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் தனது சொந்த பெயரான “அதுல்யா” எனும் கதாபாத்திரத்தில் சினிமாவில் களம் இறங்கியவர்.மேலும் இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகரான “ஜிகே” இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர்கள் நடித்த இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் “சிவராஜ்” அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை கொடுத்தது. ஆனால் இந்த திரைப்படத்தை பற்றி “டைம்ஸ் ஆப் இந்தியா” என்ற இணையதளத்தில் நல்ல கருத்துகளை எழுதி உள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து “ஏமாளி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவருடன் சமுத்திரகனி, பாலா, சரவணன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் மூலமாக அவருடைய ஆடை பாவனை மொத்தத்தையும் மாற்றி கவர்ச்சியில் இறங்கிவிட்டார். இதனால் “அதுல்யா ரவி” இணையத்தில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.