விஜய் இயக்கிய “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.
அறிமுகமாகி ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அதி விரைவில் பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட “நடிகையர் திலகம்” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
அந்த படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. அதில் அவர் நடிகை சாவித்திரியாகவே வாழ்ந்தார் என்றுதான் கூறவேண்டும்.
தற்போது “தலைவர் 168” என்னும் “அண்ணாத்த” படத்தில் நடித்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கூட ரஜினி இல்லாமல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது, மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்கள் “என்னா பெரிய லேக்” என வர்ணித்தது இணையத்தில் உலா வந்து கொண்டுள்ளது.