யாரெல்லாம் அடிக்கடி முருங்கைக்காய் சாப்பிடுகின்றீர்கள்! இவ்வளவு பக்கவிளைவுகளா? அலட்சியம் வேண்டாம்.... ஆபத்து

பருப்பு சாம்பார் என்றாலே அது முருங்கைக்காய் சாம்பார்தான். முருங்கைக்காய் போட்டால்தான் சாம்பார் சுவையாக இருக்கும் சிலர் கூறுவார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவில் மிக முக்கியமான காய்கறி என்றால் அது முருங்கைக்காய் தான்.

பிடிக்கிறதோ இல்லையோ பெரும்பாலும் முருங்கைக்காயை யாரும் தவிர்ப்பதில்லை. நமது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு எண்ணம் முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பதுதான்.

 

இது உண்மைதான். ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை. இதில் சில பக்க விளைவுகளும் உள்ளன.

இந்த பதிவில் முருங்கைக்காயால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.

  • முருங்கைக்காய் பிடிக்கும் என்பதற்காக சிலர் அதிகமாக முருங்கைக்காய் சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது.
  • இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

  • முருங்கைக்காய் எவ்வளவுதான் ஆரோக்கியமான காயாக இருந்தாலும் கூட அது சிலருக்கு ஏற்றதாக இருக்காது.
  • இதற்குக் காரணம் இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு முருங்கைக்காயால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகஅதிகம்.

  • ஹைப்போடென்ஷன் என்பது இரத்த அழுத்தத்தை மிக அதிகளவில் உயர்த்தும் ஒரு குறைபாடு ஆகும். இதனால் உலகம் முழுவதும் பலரும் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
  • ஹைப்போடென்ஷன் இதய ஆரோக்கியத்தை பாதித்து மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். முருங்கைக்காய் ஹைப்போடென்ஷன் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

  • ஆனால் இதில் உள்ள பாதிப்பு என்னவென்றால் மிக அதிக அளவில் குறைத்து விடும். அதனால் மயக்கம், தலைசுற்றல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
  • கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அதிலும் இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

  • முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும். மேலும் கருவில் உள்ள குழந்தையும்  கூட இதனால் பாதிக்கப்படலாம்.