இன்றெல்லாம் குளுர்பானங்கள் வித,விதமாக வந்துவிட்டன. போட்டி நிறைந்த அந்த சந்தையில் பல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் கவனத்தைக் குவிக்கும்வகையில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் 90 ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான குளிர்பானம் ரஸ்னா தான்!
அந்த ரஸ்னாவைப் பொறுத்தவரை ஒரு குழந்தை ரஸ்னா குடிப்பதுபோல் படப்பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த குழந்தை யார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அந்த குழந்தையின் பெயர் அங்கிதா ஜவேரி. இவர் குழந்தை நட்சத்திரமாக விளம்பரப்படங்களில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிப்படங்களிலும் நாயகியாக நடித்தார்.
தமிழைப் பொறுத்தவரை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேல், மும்தாஜ், மணிவண்ணன், மயில்சாமி, விஜயகுமார் உள்பட பலர் நடித்த லண்டன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தகதிமிதா உள்பட சிலப்படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்திவந்தவர் கடந்த 2016ல் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் ஜெகதாப்பை காதலித்து திருமணம் செய்தார்.
இப்போது அங்கீதாவுக்கு ஆண் குழந்தையும் உள்ளது. இப்போடு ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் அங்கீதாவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்து அவரா இது? என ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர் ரசிகர்கள்.