ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழ்கிறது. மிதுனம் ராசியில் உள்ள ராகு ரிஷபம் ராசிக்கும், தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிகம் ராசிக்கும் வரப்போகிறார். உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் உள்ள ராகு 2ஆம் வீட்டிற்கு குடும்ப ராகுவாக வருகிறார்.

கேது ஒன்பதாம் வீட்டில் இருந்து எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்திற்கு ஆயுள் ராகுவாக வந்து அமர்கிறார் இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசிக்காரர்களுக்கு பிரம்மாண்ட வளர்ச்சியை தரப்போகிறார். வேலை தொழில் வளர்ச்சியடையும், முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.

இந்த ராகு கேது பெயர்ச்சி நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. இளைய சகோதரர்களிடம் இருந்த பிர ச்சினை கள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இரண்டில் ராகு இரட்டிப்பு லாபத்தை கொடுக்கப் போகிறார். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.

ராகு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். பறிபோன வேலை மீண்டும் தேடி வரும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை தேடி வரும். உங்களுடைய கவலைகள், கஷ்டங்கள் நீங்கும் காலம் வரப்போகிறது. பொருளாதார ரீதியாக ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் நீங்கும். சனிதிசை, ராகு திசை, சுக்கிர திசை நடப்பவர்களுக்கு நிறைய அள்ளிக்கொடுப்பார் ராகு.

பயம் நீங்கும்

ராகுவின் பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடான கடகத்தின் மீது விழுகிறது. எட்டாம் வீடான விருச்சிகத்தை பார்க்கிறார். எட்டாம் வீட்டில் ஏற்கனவே கேது இருக்கிறார். 11ஆம் இடமான கும்பம் ராசியின் மீதும் ராகுவின் பார்வை விழுகிறது. தொழில் போட்டிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மரணபயம் நீங்கும். மறைமுக பிரச்சினைகள் நீங்கும்.

பணம் தேடி வரும்

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வையும் உங்க ராசிக்கு கிடைப்பதால் நல்ல பணம் வரும். தீயவர்களுடன் இணைய வேண்டாம். பணத்தாசைகள் ஏற்படுத்தி மறைமுக வழியில் பணத்தை கொண்டுவந்து கொடுப்பார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்முடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைக்கும். குறுக்கு வழியை விட்டு விட்டு நேர்மையான வழியை தேர்வு செய்தால் மட்டுமே ராகு பணத்தை கொட்டிக்கொடுப்பார்.

எச்ச ரிக்கை

பங்குச்சந்தை முதலீடுகளில் இருப்பவர்கள் கவனமாக முதலீடு செய்வது அவசியம். வியாபாரிகள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்கான பலனும் உங்களுக்கு நல்லபடியாக திரும்ப கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கவனச்சிதறல் வரலாம். சிலருக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். பெற்றோர்களை விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டியிருக்கும்.

கணவன் மனைவி 2 பேருக்குமே ராகு திசை நடந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போங்க. பெண்களுக்கு சில சோதனைகள் வரும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவரோடு பிரச்சினைகள் வேண்டாம் கவனமாக கையாளுங்க. வம்பு வழக்குகள் வரலாம் கவனமும் எச்சரிக்கையும் தேவை. பெண்களுக்கு உடல் ஆரோக்கியரீதியாக பிரச் சி னைகள் வரலாம் எச்சரிக் கையாக இருங்க.

விநாயகர் வழிபாடு தேவை

கேது உங்க ராசிக்கு பத்தாம் வீட்டை பார்வையிடுகிறார். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படுத்தும். வருமானம் வருவதில் இருந்த தடைகள் நீங்கும். ஆயுளுக்கு இருந்த கண்டம் விலகும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச் சினைகள் வரும். கடவுளை பற்றுங்கள் கைவிட மாட்டார். செவ்வாய்கிழமை முருகனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கலாம். விநாயகரை வழிபட பாதிப்புகள் நீங்கும்.