தமிழ் சினிமாவில் தொலைக்காட்சியின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது டாப் 10 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஆம் இவர் தனது திரையுலக ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படமும் மக்களிடையே பெரும் அளவில் வரவேற்பை பெற்றது.
மேலும் சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படமும் வசூலில் வேட்டையாடி வெற்றி பெற்றது.
ஆனால் மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஹீரோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற தடுமாறியது.
மேலும் சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான் மற்றும் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து செல்லமா எனும் பாடல் வெளிவந்து யூடியூபில் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்த அளவைகுந்தபுரமுலோ படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளராம்.
இப்படத்தை தனது எஸ்.கே. தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து வெளியிட போகிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.
மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.