சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

இதில் கலந்து கொண்ட பூவையார் கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதை வென்றார்.

இந்த நிகழ்ச்சியில் பூவையார் டைட்டில் வின்னராக தேர்வாகாத நிலையிலும் அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.

அப்படி சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில், வெறித்தனம் பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடியும், ஆடியும் அசத்தி இருந்தார். அதேபோல் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்நிலையில் பூவையார் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை கண்ட நெட்டிசன்கள், பிறந்தநாள் வாழ்த்து கூறி வெற்றி பயணம் தொடரட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.