இன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட காட்சியில், ஒரு கும்பல் சாப்பிடும் செவ்வாழை பழத்திற்கு பெய்ண்ட் அடித்து ஏமாற்றி விற்பதை இளைஞர் வீடியோவின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.

இதனால் மக்கள் உஷாராக பார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

error: Content is protected !!