1993 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சங்கவி. அதற்கு அடுத்த வருடமே தளபதி விஜய் உடன் ரசிகன் படத்தில் நடித்தார்.

விஜய்யுடன் நடித்தபோது பாடல் காட்சிகளில் கிளாமர் உடையில் நடித்தார். அதன்பிறகு சங்கவியின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. மளமளவென தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக ஆரம்பித்தார்.

மீண்டும் விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என தொடர்ந்து தளபதி விஜயின் படங்களில் அவருடன் நெருக்கமாக ஜோடி போட்டு நடித்தார். இருவருக்குள்ளும் செம கெமிஸ்ட்ரி இருப்பதாக அப்போதைய பத்திரிகைகளில் எழுதினர்.

ஒரு சில பத்திரிகைகளில் சங்கமிக்கும் விஜய்க்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வந்தது. ஆனால் உண்மையில் விஜய்யும் நானும் காதலிக்கவில்லை என சங்கவி தெரிவித்தார்.

மேலும் இந்த மாதிரி செய்திகள் வந்தவுடன் விஜய் படங்களில் தன்னை நடிக்க வைப்பதை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தவிர்த்து வந்தனர். விஜயே பெரும்பாலும் தன்னுடன் சேர்ந்து நடிக்க கூடாது என முடிவு செய்தாராம்.

அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி உச்சம் காட்டி மிரட்டிய சங்கவி மார்க்கெட்டை இழந்த பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மீண்டும் கொழுஞ்சி எனும் திரைப்படத்தில் தமிழில் நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. 42 வயதானாலும் இன்னும் கிளாமர் காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறதாம்.