சரத்குமார் மற்றும் ராதிகாவின் மகன் ராகுல் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ராகுல் டான்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாட்டுக்கு செம மாஸாக டான்ஸ் ஆடுகிறார்.

மேலும தளபதி விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் செம மாஸாக டான்ஸ் ஆடியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்னறனர்.

ஏற்கனவே ராகுல் பாடிய பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.