கன்னியாக்குமரி மாவட்டம் அருகில் உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் கோயம்புத்தூரில் தங்கியிருந்து படித்து வருகிறார். 2-வது மகள் அனுதாஸ் (19) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். மனைவி கீதா அருகில் உள்ள ஓட்டலில் சமையல் வேலைக்கு சென்றார். அனுதாஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் கீதா வீட்டுக்கு வந்த போது அனுதாஸ் தூக்கில் ச ட ல மாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அ தி ர் ச்சியடைந்து கதறி துடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று ச ட ல த்தை கைப்பற்றி பி ரே த பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் த ற் கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You missed