பிரபல தமிழ் நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன். இவர் தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் கூட நடித்து வருகிறார். இதற்கு முன்பு அக்‌ஷரா ஹாசனின் சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி  பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதை வெளியிட்டர் யார் என தெரியாத நிலையில் , அவருடைய முன்னாள் காதலர் நடிகை ரதியின் மகன் மீது சந்தேகம் திரும்பியது. ஆனால் அதை அவர் செய்யவில்லை என கூறினார்.

யாரோ ஒரு சிலர் அர்ப்ப சுகத்துக்காக இந்த கேடுகெட்ட செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்று கமலின் மகள் அக்‌ஷரா ஹாசன் கண்டித்தார். முன்னாள்  பிரபல கதாநாயகி ரதியின் மகனும், நடிகருமான தனுஷ் விர்வானியும், அக்‌ஷரா ஹாசனும் முன்பு ஒரு காலத்தில் காதலித்ததாகவும், அவர் தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் தகவல் பரவியது.

இதுகுறித்து இப்போது விளக்கம் அளித்து நடிகை ரதியின் மகன் தனுஷ் விர்வானி கூறும்போது, “அக்‌ஷராவின் குறிப்பிட்ட அந்த கவர் ச்சி புகைப்படங்கள் வெளியானபோது, அவர் என்னை அழைத்து 2013-ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் எப்படி உங்களுக்குத் தெரியாமல் வெளியாகி இருக்கும்? என்று கேட்டார். நான் போனை எங்கும் பழுதுபார்க்க கொடுக்கவில்லை அப்படியிருக்கு உங்களுக்குத் தெரியாமல் எப்படி இது நடந்தது  என்றும் கூறினார்.

அதற்கு நான் அந்த காரியத்தை நான் செய்து இருப்பதாக நினைக்கிறாயா? என்று கேட்டேன். ஆனால் அவர் இல்லை என்றார். அதன்பிறகு, அந்த மோசமான செயலை நான் செய்திருப்பது போல ,  என்னை குற்றவாளிபோல் சித்தரித்து தகவல்கள் பரவின.

இந்த பிரச்னைக்குப் பிறகு  நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம். இதனால் எனக்குமிக மோசமான மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் எனது தாய் ரதி அதிர்ச்சியாகி, என்னுடைய நிலை பரிதாபகரமாக ஆகிவிட்டது நினைத்து  அக்‌ஷரா ஹாசன் குடும்பத்தினரிடம் அம்மா பேச முயன்றார். ஆனால் நான் அதை தடுத்து விட்டேன்” என்றார். இதற்கு முன்பு ரதி தமிழில் கமல்ஹாசனுடன் சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.