1 இலை மட்டும் சாப்பிட்டால் போதும் 100 வயதுவரை உங்கள்சரீரம் இறக்காது...

நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்தார்கள், இயற்கையை அழித்து வாழவில்லை. ஆனால் நாம் நாகரிகம் என்ற பெயரில் நம் வாழ்க்கை முறையையே முற்றிலும் மாற்றிவிட்டோம். நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் மருந்துகளாக பயன்படுத்தினார்களோ அவற்றை உதாசீனப்படுத்தி மேற்கத்திய மருந்துகளை நாடிச்சென்றதன் விளைவுதான் இப்பொழுது மிகக்குறைந்த வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

அப்படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம்.

அரசமரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் வீட்டின் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது. ஆனால் நாம் அரசமர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக மட்டுமே அறிவோம்.

தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் அரசமர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

அரசமர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையதுதான். அரசமர இலைகளையும், காய்களையும் எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அவற்றை சமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த பொடியை நீருடன்கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் அற்புத பலனையளிக்கும்.

அரசமரத்து இலைகளின் பால் கண்வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். கண்வலி இருக்கும்போது அரசமர இலைகளை கசக்கி அதனை கண்களில் ஊற்றினால் சில நிமிடங்களில் வலி குறைய தொடங்கும்.

அரசமரத்தின் கொளுந்து இலைகள் அல்லது புதியதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்குவது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு பற்களை பாக்டீரிய தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

ஒருவேளை பாம்புக்கடித்துவிட்டால் அரசமர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் கொடுத்தால் அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது.இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது.

இதன் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில் இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம்.சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும்.

error: Content is protected !!