பிரபல விஜய் தொலைக்காட்சியில், சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் கானா பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூவையார்.

இவர் 2019 ஆன் ஆண்டு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடலை பாடி அதில் நடித்தும் இருப்பார். மேலும் தற்போது, தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் பூவையார்.

இந்த நிலையில், பாடகர் பூவையாரின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதன் படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூவையருக்கு 4 லட்சத்தில் சொந்த வீடு உள்ளது.

சென்னையில் சொந்த பிளாட் மற்றும் சொந்த கார் வைத்துள்ளாராம். அது மட்டும் இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 3ஆம் பரிசு வென்று ரு 10 லட்சம் வைத்துள்ளாராம்.

மேலும், தனது கடின உழைப்பாலும் மற்றும் இசை திறமையாலும் தற்போது 20 லட்சம் சொத்து வைத்துள்ளாராம் பாடகர் பூவையார்.