சீனாவில் இரண்டு முறை கருச்சிதைவு, ஒரு முறை கர்ப்பம் நிற்கவில்லை என இப்படி மூன்று முறை குழந்தை நிற்காத நிலையில், 31 வயது தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் இரண்டு இரட்டையர்கள் என மொத்தம் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள 31 வயது மதிக்கத்த Gao என்று அறியப்படும் தாய், குழந்தை நிற்காமல் கடும் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து கர்ப்பமான அவருக்கு கடந்த புதன் கிழமை அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் Gao-வுக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

முதலில் ஒரு பெண் இரட்டையர், அடுத்த ஒரு நிமிடம் கழித்து ஆண் இரட்டையர் என மொத்தம் நான்கு குழந்தைகளுக்கு தாயாக மாறியுள்ளார்.

இதனால் ஒட்டு மொத்த குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது. Gao-வின் கணவர் இது எல்லாம் கடவுளின் ஆசீர்வாதம் தான் என்று கூறியுள்ளார்.

குழந்தை மற்றும் தாய் தற்போது நல்ல நிலையில் இருந்தாலும், 32-வது வாரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதனால் குழந்தைகள் தனியாக வார்டுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படி இரட்டை குழந்தைகள், அடுத்தடுத்து பிறப்பது 70 மில்லியனில் ஒருவருக்கு தான் நடக்கும் என்றும், இது அதிசயம் என்றும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.